மின்மினி ஆசைகள்
December 15, 2013
பகலவனாய் சில ஆசைகள்
பகல்முழுக்க உடன் இருக்கும்!
வெண்ணிலவாய் சில ஆசைகள்
விடியும்வரை கனவில் நிற்கும்!
மின்னலாய் சில ஆசைகள்
மழையூடே வந்து செல்லும்!
தெருவிளக்காய் சில ஆசைகள்
தேடலில் துணை புரியும்!
நட்சத்திரமாய் சில ஆசைகள்
அடிக்கடி நினைவில் மின்னும்!
கற்பூரமாய் சில ஆசைகள்
கடவுளை அடைய வேண்டும்!
அகல்விளக்காய் சில ஆசைகள்
அகலாமல் கண்களில் இருக்கும்!
பட்டாசாய் சில ஆசைகள்
பற்றையில் வெடிக்கத் துடிக்கும்!
ஆசைஆசையாய் ஆயிரம் மின்மினிகள்
அத்தனை ஆசைகளையும் அள்ளிவந்து
அடைக்கலம் கொள்ளவும் ஒரு ஆசை!